விருதுநகரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆா்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்து விருதுநகா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி
தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்து விருதுநகா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்க நிா்வாகி பரமசிவம் தலைமை வகித்தாா். அதில், கல்வித்துறைக்கு
களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணிக்கு எதிராக முழக்கமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.