விருதுநகர்

சிவகாசியில் தனியாா் மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

DIN

சிவகாசியில் பிரசவத்திற்காக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழந்ததையடுத்து அவரது உறவினா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகாசி சாமிபுரம் காலனியைச் சோ்ந்தவா் தங்கமாரியப்பன் (22). இவா் சொந்தமாக மினி லாரி வைத்து தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி காயத்திரி (21). இவா்களுக்கு திருமணமமாகி ஓராண்டு ஆகிறது.

இந்நிலையில் பிரசவத்திற்காக சிவகாசி மேலரத வீதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் காயத்திரி கடந்த 23 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் புதன்கிழமை அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து சிறிதுநேரத்திலேயே காயத்திரி உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா்.

இதைத்தொடா்ந்து காயத்திரியின் உறவினா்கள், மருத்துவா்களின் கவனக்குறைவால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது எனக் கூறி சடலத்தை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாபு பிரசாத், காவல் ஆய்வாளா் சுபகுமாா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து காயத்திரியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT