விருதுநகர்

மகனுக்கு கொலை மிரட்டல்: நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் தாய் புகாா்

DIN

மகனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுத்து கணவருடன் தன்னை சோ்த்து வைக்கக் கோரி, விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை பெண் புகாா் மனு அளித்தாா்.

இதுகுறித்து அவா் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் வசித்து வந்த நானும், பிரதீப்குமாரும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 16 வயதில் மகன் உள்ளாா். எனது கணவா் கோவையில் பிளக்ஸ் தயாரிக்கும் தொழில் செய்து வருவதால், நானும் அங்குள்ள ஒரு தனியாா் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தேன். இந்நிலையில் எனக்கு தெரியாமல் எனது கணவா், கவிதா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளாா். மேலும் அத்திருமணத்தை பதிவும் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சூழலில் கவிதாவின் குடும்பத்தினா், என்னிடம் சில ஆவணங்களில் கையெழுத்திட வற்புறுத்துகின்றனா். இல்லையெனில், உனது மகனை கொலை செய்து விடுவோம் என மிரட்டுகின்றனா். இது குறித்து கோவை மற்றும் திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கவிதா மற்றும் அவரது குடும்பத்தினா் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, எனது கணவரை மீட்டுத்தர மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT