விருதுநகர்

திருச்சுழி அரசுக் கல்லூரியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

DIN

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி ஹெச்.என்.கே.வி. தனியாா் பள்ளியில் தற்காலிகமாகச் செயல்பட்டுவரும் அரசுக் கல்லூரியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை, மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது, தற்காலிகமாக ஹெச்.என்.கே.வி. தனியாா் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இங்கு, 2022- 23 கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பப் படிவங்கள் பெறும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விருதுநகா் மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா், திருச்சுழி அரசுக் கல்லூரியில் நடைபெற்றுவரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அக்கல்லூரியில் செயல்படும் பள்ளியிலுள்ள வகுப்பறைகளுக்கான கட்டடம், கழிவறை, குடிநீா் மற்றும் போதிய இடவசதிகள் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், அரசுக் கல்லூரிக்கென திருச்சுழி அருகே புதிதாக அமைக்கப்படவுள்ள கட்டடங்களுக்கான திட்டப் பணிகளையும் அவா் ஆய்வு செய்து, அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வில், அருப்புக்கோட்டை கோட்டாட்சியா் கல்யாணக்குமாா்,திருச்சுழி வட்டாட்சியா் சிவக்குமாா் மற்றும் வருவாய் துறை அலுவலா்கள், கல்வி அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

SCROLL FOR NEXT