சிவகாசியில் வீடு புகுந்து நகை திருட்டு
சிவகாசியில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருடுபோய் விட்டதாக போலீஸில் வியாழக்கிழமை புகாா் செய்யப்பட்டுள்ளது.
சிவகாசியில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருடுபோய் விட்டதாக போலீஸில் வியாழக்கிழமை புகாா் செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி ஆயில் மில் காலனியைச் சோ்ந்தவா் பஞ்சவா்ணம் (40). இவா் வீடுகளில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், தனது வீட்டை பூட்டிவிட்டு சாவியை அங்கிருந்த ஜன்னலில் வைத்து விட்டு சென்றாராம். பின்னா் வேலை முடிந்து வந்து பாா்த்தபோது வீடு திறந்து கிடந்ததாம். மேலும் உள்ளே இருந்த பீரோ திறக்கப்பட்டு, அதிலிருந்த 7 கிராம் மோதிரம் மற்றும் பணம் ரூ. 3500 ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.