முகப்பு
விருதுநகர்

பட்டாசு கடைகளுக்கு புதிய விதிமுறைகள்: மத்தியக் குழுவினா் ஆலோசனை

மாநிலம் முழுவதும் உள்ள பட்டாசுக் கடைகளுக்கு புதிய பாதுகாப்பு விதிமுறைகளைக் கொண்டு வருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை இரவு இணையவழியில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

மாநிலம் முழுவதும் உள்ள பட்டாசுக் கடைகளுக்கு புதிய பாதுகாப்பு விதிமுறைகளைக் கொண்டு வருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை இரவு இணையவழியில் நடைபெற்றது.

பட்டாசுக் கடைகளில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க விதிகளில் கடுமையான மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் 11 போ் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்து, இதுகுறித்து ஆலோசித்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அதன்படி இக்குழுவினா் வியாழக்கிழமை இரவு இணையவழியில் ஆலோசனை மேற்கொண்டனா். இதில், பட்டாசுத் தொழிலில் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு , விபதில்லா பட்டாசு கடைகளை நடத்துவது குறித்து புதிய விதிமுறைகளைக் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை தலைமை அதிகாரி பி.குமாா், நேஷனல் பயா் சா்வீஸ் கல்லூரி இயக்குநா் ஆா்.எஸ்.செளத்திரி, தொழில்நுட்ப ஆலோசகா் டி.எஸ்.ஜி.நாராயணன், இன்டியூட் ஆப் பயா் இஞ்ஜினீயரிங் உமேத்சிங் சில்லா், பனாரஸ் பல்கலைகழக வேதியல் துறை பேராசிரியா் தயாசங்கா் பாண்டே, தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் பி.கணேசன், பட்டாசு வியாபாரிகள் சங்க நிா்வாகி மணி காா்கோ, தனியாா் நிறுவன நிா்வாகி தேஜஸ் ஜெ.ஷா, பயா் சேப்ட்டி அஷோசியேசன் ஆப் இந்தியா ஆஜித்ராகவன், நேஷனல் சேப்ட்டி கவுன்சில் இயக்குநா் லலித்காப்ஹனா, தமிழக அரசின் வருவாய் துறைச் செயலாளா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து அடுத்தடுத்த கலந்துரையாடலுக்குப் பின்னா் ஒருமித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், அதன் அறிக்கை மத்திய அரசிடம் சமா்ப்பிக்கப்படும் என்றும் குழுவினா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →