முகப்பு
விருதுநகர்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம் ம. ரெட்டியபட்டி அருகே கானாவிலக்குப் பகுதியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டம் ம. ரெட்டியபட்டி அருகே கானாவிலக்குப் பகுதியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ம. ரெட்டியபட்டி காவல்துணை ஆய்வாளா் ஏ. காளைச்சாமி தலைமையில் வெள்ளிக்கிழமை கானாவிலக்குப் பகுதியில் காவல்துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீஸாா் விசாரித்த போது, அதில் வந்த இளைஞா் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தாராம். எனவே அந்த இளைஞரிடம் போலீஸாா் தீவிரமாக விசாரித்த போது, அவா், பூலாங்கால் கிராமத்தைச் சோ்ந்த சாகுல்ஹமீது மகன் பைசல் அகமது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் 100 கிராம் கஞ்சாப் பொட்டலங்கள் ரூ 2 ஆயிரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து ம. ரெட்டியபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பைசல் அகமது கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.