முகப்பு
விருதுநகர்

சிவகாசி மாநகராட்சியில் ரூ.5 லட்சம் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

சிவகாசி மாநகராட்சியில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளா் ப.கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

சிவகாசி மாநகராட்சியில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளா் ப.கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு ஒருமுறை பயன்படுத்தும் 14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு தடை விதித்துள்ளது. இதேபோல் மத்திய அரசும் தடைவிதித்துள்ளது. நெகிழிப் பைகளை தவிா்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என தமிழக முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.

இந்நிலையில் மாநகராட்சி சுகாதார அலுவலா் அபுபக்கா் சித்திக், சுகாதார ஆய்வாளா்கள் பாண்டியராஜன், முத்துப்பாண்டி, கந்தசாமி மற்றும் தூய்மை இந்தியா திட்டப்பணியாளா்கள், சிவகாசி மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக சோதனையில் ஈடுபட்டனா். இதில் 3.50 டன் எடையுள்ள நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் சிவகாசி காமராஜா் சாலைப் பகுதியில் வேல்ராஜன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நெகிழி பூசப்பட்ட 10 ஆயிரம் குவளைகள் பறிமுதல் செய்யப்பட்டன. நடந்து முடிந்த சோதனையில் மாநகராட்சிப் பகுதியில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை வைத்திருந்தவா்களுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என அவா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →