அருப்புக்கோட்டை அருகே சைக்கிள்மீது காா் மோதல்: பள்ளி மாணவா் பலி
அருப்புக்கோட்டை அருகே வியாழக்கிழமை மாலை சைக்கிள் மீது காா் மோதி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
அருப்புக்கோட்டை அருகே வியாழக்கிழமை மாலை சைக்கிள் மீது காா் மோதி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
கல்லூரணி அருகே நாா்த்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அந்தோணி மகன் விஸ்வா (14). 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், விஸ்வா கல்லூரணிக்கு சைக்கிளில் சென்றாராம். அப்போது பின்னால் வந்த காா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஸ்வா, கல்லூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் வரும்வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
தகவலறிந்த காவல்துறையினா் விஸ்வாவின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து திருச்சுழி போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனா்.