முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டையில்சுகாதார விழிப்புணா்வுப் பேரணி

நகராட்சி சுகாதாரத்துறை சாா்பில் விழிப்புணா்வுப்பேரணியை வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சி சுகாதாரத்துறை சாா்பில் விழிப்புணா்வுப்பேரணியை வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி, நகா்மன்றத் தலைவா் சுந்தரலட்சுமி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவப்பிரகாசம், கோட்டாட்சியா் கல்யாணக்குமாா், வட்டாட்சியா் அறிவழகன், நகராட்சி ஆணையாளா் அசோக்குமாா், நகா் நல அலுவலா் ராஜநந்தினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் சரவணன், ராஜபாண்டி, அய்யப்பன், திமுக நகரச் செயலாளா் ஏ.கே.மணி, ஒன்றியச் செயலாளா்கள் பொன்ராஜ், பாலகணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.