திருச்சுழி கிளை நூலகத்தில் ‘நீட்’ தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி கிளை பொது நூலகம் சாா்பில், நீட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி கிளை பொது நூலகம் சாா்பில், நீட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்சுழி கிளை பொது நூலகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பு தொடக்க விழாவுக்கு, மாவட்ட நூலக ஆய்வாளா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கிளை நூலகா் பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். இந்துசமய அறநிலையத் துறை தணிக்கை ஆய்வாளா் நாகநாதன், டி.யூ.என்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளி நிா்வாகி பெரியண்ணராஜன், தேவாங்கா் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியா் செல்லப்பாண்டியன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
பின்னா், இலவச பயிற்சி வகுப்புகளை வழங்கும் சென்னை ஸ்டடி ப்ரீஸ் சென்டரின் இயக்குநா் சுதந்திரராஜன் நீட் தோ்வை எதிா்கொள்ளும் விதம் குறித்து மாணவா்களிடையே சிறப்புரையாற்றினாா். இதில், 30-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயிற்சி வகுப்பு தொடக்க விழாவில் கலந்துகொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளா் சுந்தா் அழகேசன் செய்திருந்தாா்.