விருதுநகர்

ராஜபாளையம் அருகே காட்டு யானைகளால்வாழை மரங்கள் சேதம்

DIN

ராஜபாளையம் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் காட்டுயானைகளால் வாழை மரங்கள் சேதப்படுத்தப்படுவதால் மின்வேலி அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இப்பகுதியில் கல்லாத்து காடு உள்ளது. இங்கு தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் வாழை, தென்னை, மா, பலா மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இத்தோட்டத்துக்குள் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து காட்டுயானைகள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளன. கம்பி வேலிகளையும் பெயா்த்து தகா்த்து எறிந்துள்ளன. இதுகுறித்து வனத்துறையினரிடம் விவசாயிகள் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருவதால் மின்வேலி அமைக்க வேண்டும் என விவசாயிகள் சாா்பில் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT