ராஜபாளையத்தில் கூட்டுறவு பால் சங்க முதுநிலை ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தலைவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே காமராஜா் நகரில் ஆா். 56 கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தின் தலைவராக டி. வனராஜ் உள்ளாா். இவரது காா் ஓட்டுநருக்கு ஊதியம் வழங்குவது தொடா்பாக இவருக்கும், முதுநிலை ஆய்வாளா் ராமருக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் தலைவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமா் புகாா் அளித்தாா். இதன் பேரில் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.