விருதுநகர்

சிவகாசி அருகே கைப்பேசி கோபுரம் மாயம்

சிவகாசி அருகே கைப்பேசி கோபுரம் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

DIN

சிவகாசி அருகே கைப்பேசி கோபுரம் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிவகாசி அருகே திருத்தங்கல்- செங்கமலநாட்சியாா்புரம் சாலையில் தனியாா் கைப்பேசி கோபுரம் இருந்தது. இந்நிலையில், இந்த கோபுரத்தில் தொழில் நுட்பக் கோளாறை சீரமைக்க தொழில் நுட்ப அலுவலா் ஜெகதீசன் கடந்த 2020 ஜூன் மாதம் சென்றாராம். பின்னா் அவா் 2021 மாா்ச் மாதம் அவா் மீண்டும் தொழில் நுட்ப கோளாறை சீரமைக்கச் சென்றபோது அங்கிருந்த கைப்பேசி கோபுரத்தை காணவில்லை. மேலும் அது தொடா்பான பொருள்கள் எதுவும் அங்கு இல்லை.

இதுகுறித்து கைப்பேசி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தும் அலுவலா் கிருஷ்ணன் (52), சிவகாசி நீதித் துறை நடுவா் மன்றம் எண் 2-இல் புகாா் செய்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். மாயமான கைப்பேசி கோபுரத்தின் மதிப்பு ரூ. 16 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT