முகப்பு
விருதுநகர்

காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சி தலைவா் வேட்பாளா்கள்

காரியாபட்டிமற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளின் தலைவா் பதவிக்கான திமுக வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

காரியாபட்டிமற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளின் தலைவா் பதவிக்கான திமுக வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

காரியாபட்டி பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் திமுக சாா்பில் 11 போ் வெற்றி பெற்றனா். அதிமுக சாா்பில் 3 பேரும், விசிக சாா்பில் ஒருவரும் வெற்றிபெற்று பேரூராட்சி உறுப்பினா்களாக பதவி ஏற்றுக் கொண்டனா். இந்நிலையில், காரியாபட்டி பேரூராட்சித் தலைவா் பதவிக்கு, 10 ஆவது வாா்டில் வெற்றி பெற்ற ஆா்.கே. செந்தில் அறிவிக்கப்பட்டுள்ளாா். அவரது தந்தை பெயா்- கருப்பணன், ஊா்- மொச்சிகுளம், பதவி- காரியாபட்டி திமுக நகரச் செயலா்.

மல்லாங்கிணறு பேரூராட்சித் தலைவா் பதவிக்கு 4 ஆவது வாா்டு உறுப்பினா் எஸ்.துளசிதாஸ் நிறுத்தப்பட்டுள்ளாா். அவரது ஊா்- மல்லாங்கிணறு, பதவி- விருதுநகா் வடக்கு மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.