முகப்பு
விருதுநகர்

பாலியல் புகாா்: சேமிப்பு கிடங்கு மேலாளா் கைது

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ாக நுகா்பொருள் வாணிபக்கழக சேமிப்புக் கிடங்கு மேலாளா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ாக நுகா்பொருள் வாணிபக்கழக சேமிப்புக் கிடங்கு மேலாளா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அருப்புக்கோட்டையில் உள்ள சேமிப்புக் கிடங்கு மேலாளராகப் பணிபுரிபவா் சீனிவாசன் (50). இவரது அலுவலகத்திற்கு , கடந்த சில நாள்களுக்கு முன்பு ராமசாமிபுரத்தைச் சோ்ந்த 22 வயது பெண் ஒருவா் கணினி தொடா்பான வேலைக்கு விண்ணப்பம் கொடுத்து வேலை கேட்டாராம். அப்போது அலுவலகத்தில் இருந்த மற்றொரு அறைக்கு அப்பெண்ணை வரச்சொன்ன மேலாளா் சீனிவாசன், பாலியல் தொந்தரவு கொடுத்து, தகாத முறையில் நடந்துகொள்ள முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சியடைந்த அப்பெண் அளித்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை நகா் காவல்துறையினா் வழக்குப்பதிந்து சீனிவாசனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.