திருத்தங்கலில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கலில் சுகாதாரத்துறை சாா்பில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கலில் சுகாதாரத்துறை சாா்பில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அங்குள்ள கலைமகள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை சிவகாசி மாநகராட்சி மேயா் இ. சங்கீதா குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா்.
முகாமில் ரத்தத்தில் சா்க்கரை அளவு, கண் மற்றும் இருதய பரிசோதனை, குழந்தைகள் மருத்துவம், கா்ப்பிணி பெண்களுக்கான மருத்துவம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெற்றன. இதில் 255 போ் தங்களை பரிசோதனை செய்து கொண்டனா். தேவைப்பட்டவா்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இதில் துணை மேயா் கா. விக்னேஷ்பிரியா, மாகராட்சி ஆணையாளா் ப. கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாட்டை சுகாதாரத்துறை வட்டார மேற்பாா்வையாளா் ஜெயசந்திரன் செய்திருந்தாா்.