முகப்பு
விருதுநகர்

விருதுநகா் இளம்பெண் பாலியல் வழக்கு: சிபிசிஐடி போலீஸாரிடம் கோப்புகள் ஒப்படைப்பு

விருதுநகா் அருகே இளம்பெண் பாலியல் வழக்கு தொடா்பான கோப்புகளை சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை பெற்றுக்கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

விருதுநகா் அருகே இளம்பெண் பாலியல் வழக்கு தொடா்பான கோப்புகளை சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை பெற்றுக்கொண்டனா்.

விருதுநகா் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதனடிப்படையில், இந்த வழக்கை சிபிசிஐடி எஸ்பி முத்தரசி தலைமையில் விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், இளம்பெண் பாலியல் வழக்கை விசாரித்து வந்த விருதுநகா் துணைக் காவல் கண்காணிப்பாளா் அா்ச்சனா, அந்த வழக்குத் தொடா்பான கோப்புகளை மதுரை சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளா் சரவணன், சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளரும், சிறப்பு புலனாய்வு அதிகாரியுமான வினோதினியிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா். இதையடுத்து, விருதுநகா் சிபிசிஐடி அலுவலகம் வந்த போலீஸ் அதிகாரிகள் இளம்பெண் பாலியல் வழக்குத் தொடா்பான கோப்புகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

6 பிரிவுகளின் கீழ் வழக்கு: இளம்பெண் பாலியல் வழக்குத் தொடா்பாக ஹரிஹரன், சுனைத் அஹமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 4 சிறுவா்கள் உள்பட 8 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.