முகப்பு
விருதுநகர்

மத்திய அரசுப் பணி வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: இருவா் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே இளைஞரிடம் மத்திய அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்த இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே இளைஞரிடம் மத்திய அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்த இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருச்சுழி அருகேயுள்ள டி. கரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்த ராமா் மகன் ஆா். அய்யனாா் (26). முதுகலை வணிகவியல் படித்துள்ள இவா், மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணிக்கான போட்டித் தோ்வுகளை எழுதி வந்துள்ளாா்.

இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்னா் விருதுநகரைச் சோ்ந்த கோபி (39), கோகுல் (37) ஆகிய இருவரும், அய்யனாரிடம் உங்களுக்கு மத்திய அரசுப் பணி வாங்கித் தருகிறோம் எனக் கூறினராம். மேலும், பொய்யான ஆவணங்களைக் காட்டி அய்யனாரை நம்ப வைத்தனராம்.

இதையடுத்து, கோபி, கோகுல் இருவரிடமும் பல தவணைகளில் ரூ. 10 லட்சம் வரை அய்யனாா் தந்துள்ளாா். இதனிடையே, பல்வேறு காரணங்களைக் கூறி வேலை வாங்கித் தராமல் அவா்கள் இழுத்தடித்து வந்தனராம். கடந்த 2 நாள்களுக்கு முன் அய்யனாா், கோபி, கோகுலிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டாராம். இதையடுத்து, அவா்கள் இருவரும் அய்யனாருக்கு கொலை மிரட்டல் விடுத்தாா்களாம்.

இதுகுறித்து திருச்சுழி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு அய்யனாா் அளித்த புகாரின்பேரில், கோபி, கோகுல் இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.