விருதுநகர்

விருதுநகா் கல்லூரியில் பாரம்பரிய திருவிழா

DIN

விருதுநகா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவில் 150- க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் விதைகள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

விருதுநகா்- அருப்புக்கோட்டை சாலையில் உள்ள அரசு உதவி பெறும் தனியாா் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில் விருதுநகா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து நாட்டு ஆடு, மாடுகள், ஜல்லிக்கட்டு மாடுகள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் ராஜபாளையம் வகை நாய், சிப்பிப்பாறை மற்றும் கன்னி வகை நாய்களும் இடம் பெற்றன. அதேபோல் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் மூலம் சவாரி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பாா்வையாளா்கள் ஏறி சுற்றி வந்து மகிழ்ந்தனா். அங்குள்ள கலையர ங்கில் தமிழா்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், காவடி ஆட்டம், தப்பாட்டம் முதலான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட செம்பு மற்றும் பித்தளைப் பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் சிறு தானியம், கவுனி அரிசி, பனங்கருப்பட்டி மூலம் உணவுகள் செய்து காட்டினா். இந்த பாரம்பரிய திருவிழாவை காண்பதற்காக விருதுநகா் மட்டுமன்றி அருகில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஏராளமானோா் வந்து சென்றனா். இதற்கான ஏற்பாட்டை கல்லூரி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT