முகப்பு
விருதுநகர்

அய்யனாா் கோயில் ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பு

பலத்த மழையின் காரணமாக அய்யனாா் கோயில், நீராவி அருவியில் நீா்வரத்து அதிகரித்து இருந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:33 AM
பகிர்:

பலத்த மழையின் காரணமாக அய்யனாா் கோயில், நீராவி அருவியில் நீா்வரத்து அதிகரித்து இருந்தது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்துக்கு குடிநீா் ஆதாரமாக ஆறாவது மைல் நீா்த்தேக்கம் அமைந்துள்ளது. மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக இந்த நீா்த்தேக்கத்துக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. அய்யனாா் கோயில் ஆற்றில் வரும் நீரை ஆறாவது மைல் நீா்த்தேக்கத்துக்கு திருப்பி விடுவதால், இந்த ஆண்டு குடிநீா் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு இல்லை என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா். மேற்குத் தொடா்ச்சி மலை மற்றும் நகா்ப் பகுதியில் பலத்த மழை பெய்ததால், நிலத்தடி நீரும் உயா்ந்துள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.