முகப்பு
விருதுநகர்

ராஜபாளையத்தில் மழையால் சேதமடைந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலருக்குப் பாராட்டு

ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், மழையால் சேதமடைந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், மழையால் சேதமடைந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

ராஜபாளையம் நகராட்சியில் புதைச் சாக்கடை, தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த்திட்டப் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக நகரின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த சாலைகள், சிறு மழை பெய்தால் கூட சேறும் சகதியுமாக மாறிவிடுகின்றன. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இதேபோல், ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதி இருந்து வந்தது. மேலும் அப்பகுதியில் ஒரு இடம் மிகவும் பள்ளமாகவும் இருந்தது.

இந்தநிலையில், அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக் காவலா் பெரியசாமி, அந்தப் பள்ளத்தை மண், கற்களைக் கொண்டு மூடி சீரமைத்தாா்.

இதைக் கண்ட பொதுமக்கள் காவலா் பெரியசாமியை பாராட்டினா். மேலும், நகரில் உள்ள அனைத்து சாலைகளையும் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.