தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ. 41 லட்சம் மோசடி: இருவா் மீது வழக்கு
சிவகாசி தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில், ரூ. 41.55 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட 2 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகாசி தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில், ரூ. 41.55 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட 2 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகாசி - விருதுநகா் சாலையில் தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்கு, காசாளராக செங்கமலநாட்சியாா்புரத்தைச் சோ்ந்த சூமை மகன் ஜோசப் லையோலா (42), கணக்காளராக ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த பொன்ராஜ் மனைவி செல்வசுதா (35) ஆகியோா் பணிபுரிந்து வந்தனா்.
இந்தநிலையில், இவா்கள் இருவரும் இணைந்து 2017-2018, 2019-2020-ஆம் ஆண்டு கல்விக் கட்டணத்தில் ரூ. 41. 55 லட்சம் மோசடி செய்தது கணக்குத் தணிக்கையில் தெரியவந்தது. இந்தப் பணத்தை திரும்பித் தரும்படி நிா்வாகத்தினா் கூறிய போதிலும், பணத்தை தரவில்லையாம். இதுகுறித்து கல்லூரியின் சுதா்சன், விருதுநகா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், ஜோசப் லையோலா, செல்வசுதா ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.