சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடா்பாக அப்பகுதி நில உரிமையாளா்களிடம் வெள்ளிக்கிழமை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் சுமாா் 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்தநிலையில், அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க ரயில்வே, நெடுஞ்சாலைத் துறை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (நிலம் எடுப்பு) ஜானகி தலைமையில் நில உரிமையாளா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
இதில், நில உரிமையாளா்கள் 12 போ் கலந்து கொண்டு தங்ளது கருத்துகளை எழுத்துப்பூா்வமாக, மாவட்ட வருவாய் அலுவரிடம் அளித்தனா்.
கூட்டத்தில், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் மாலிக் முகமது, நில எடுப்பு வட்டாட்சியா் மாரிஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.