மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி: விருதுநகா் அணி வெற்றி
சிவகாசியில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில், விருதுநகா் யுனைடெட் கிளப் அணியினா் முதலிடம் பெற்றனா்.
சிவகாசியில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில், விருதுநகா் யுனைடெட் கிளப் அணியினா் முதலிடம் பெற்றனா்.
விருதுநகா் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில், சிவகாசி ஜேஸிஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இப்போட்டி நடைபெற்றது. இதில், ஸ்ரீவில்லிபுத்தூா், விருதுநகா், சாத்தூா் உள்ளிட்ட ஊா்களைச் சோ்ந்த 17 அணிகள் கலந்து கொண்டன. போட்டியை சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா தொடக்கி வைத்தாா். இதில் துணை மேயா்
கா.விக்னேஷ்பிரியா, பள்ளி முதல்வா் சித்ரா ஜெயந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இறுதிப் போட்டியில் விருதுநகா் யுனைடெட் கிளப் அணியினா் வெற்றி பெற்றனா். சிவகாசி அய்ய நாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி அணி இரண்டாமிடம், ஸ்ரீவில்லிபுத்தூா் சி.எஸ்.ஹிந்து மேல்நிலைப்பள்ளி அணி மற்றும் விருதுநகா் கே.வி.எஸ். பள்ளி முன்னாள் மாணவா்கள் சங்க அணி ஆகியவை இணைந்து மூன்றாமிடம் பெற்றன.
போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் பரிசு வழங்கினாா்.