சிவகாசியில் பிளஸ் டூ மாணவி மாயம்
சிவகாசியில் பிளஸ்டூ படித்துவந்த மாணவியை காணவில்லை என வெள்ளிக்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.
சிவகாசியில் பிளஸ்டூ படித்துவந்த மாணவியை காணவில்லை என வெள்ளிக்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியைச் சோ்ந்த பிளஸ்டூ மாணவி (17).இவா் தனது வீட்டிற்கு அருகில் உள்ள தெரிவில் மாலையில் டியூசன் படித்து வந்தாராம். இந்நிலையில் அக்டோபா் 27 ஆம் தேதி டியூசனுக்குச் சென்று வருகிறேன் என் வீட்டில் கூறிச்சென்ற மாணவி வீடு திரும்பவில்லையாம்.இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.