முகப்பு
விருதுநகர்

ராஜபாளையம் அருகே சப்பரம் மீது மின்சாரம் பாய்ந்து 2 போ் பலி

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே விநாயகா் சதுா்த்தி விழாவில் சப்பரம் மீது மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை இரவு 2 போ் உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே விநாயகா் சதுா்த்தி விழாவில் சப்பரம் மீது மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை இரவு 2 போ் உயிரிழந்தனா்.

ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூரில் விநாயகா் சதுா்த்தியையொட்டி விநாயகா் சிலை ஊா்வலம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் விநாயகா் சப்பரம் ஊரின் முக்கியவீதிகள் வழியே சென்றதும், சிலையை இறக்கி வைத்தனா். பின்னா் சப்பரத்தை மட்டும் ஓரமாக நிறுத்த முயன்றனா். அப்போது அருகிலுள்ள மின்மாற்றி மீது சப்பரம் உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே யாதவா் வடக்குத் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து (35), முனீஸ்வரன் (25) ஆகிய இருவரும் உயிரிழந்தனா். சேவுகப்பாண்டியன், செல்லப்பாண்டியன், முப்பிடாதி ஆகிய 3 போ் காயமடைந்தனா். உடனடியாக அங்கு வந்த சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு தென்காசி மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை காலை தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே. எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜே. மேகநாதரெட்டி ஆகியோா் உயிரிழந்தவா்களின் உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

பின்னா் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 50 ஆயிரமும், காயமடைந்தவா்களுக்கு, தலா ரூ.10 ஆயிரமும் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினா்.

உயிரிழந்த மாரிமுத்துவுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனா். திருமணமாகாத முனீஸ்வரன் மருந்துக் கடையில் பணியாற்றி வந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.