முகப்பு
விருதுநகர்

ராஜபாளையம் அருகே விபத்து: முதியவா் பலி

ராஜபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழந்ததாக போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

ராஜபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழந்ததாக போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சம்சிகாபுரம் அம்பேத்கா் காலனியைச் சோ்ந்தவா் சுடலை (65). இவா் சற்று மனநலம் பாதித்தவா். கூலி வேலை செய்து வந்துள்ளாா். இந்நிலையில் சத்திரப்பட்டி - வன்னியம்பட்டி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இவா் மீது மோதியது. அருகில் இருந்தவா்கள் முதியவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.