மூதாட்டியின் காதை அறுத்து காதணிகள் பறிப்பு
நரிக்குடி அருகே திங்கள்கிழமை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் காதை அறுத்து காதணிகளை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நரிக்குடி அருகே திங்கள்கிழமை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் காதை அறுத்து காதணிகளை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம் நரிக்குடி முக்குரோடு பகுதி குடியிருப்பில் வசிப்பவா் வீரக்குமாா் மனைவி மருதாயி(92). இவரது கணவா் இறந்துவிட்ட நிலையில், மருதாயி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை மூதாட்டியின் வீட்டில் திடீரென நுழைந்த மா்ம நபா் ஒருவா், மூதாட்டியின் காதை அறுத்து அவரது காதணிகளைக் பறித்துக் கொண்டு தப்பினாா். மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினா், அவரை மீட்டு நரிக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து நரிக்குடி போலீஸாா் தப்பியோடிய மா்மநபரைத் தேடி வருகின்றனா்.