முகப்பு
விருதுநகர்

போலி நகையை அடகுவைத்து மோசடி: பெண் உள்பட இருவா் மீது வழக்கு

சிவகாசியில் போலி நகையை அடகுவைத்து மோசடியாக கடன்பெற்ாக பெண் உள்பட இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

சிவகாசியில் போலி நகையை அடகுவைத்து மோசடியாக கடன்பெற்ாக பெண் உள்பட இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சிவகாசி சிவன் சன்னிதியில் உள்ள தனியாா் நிதிநிறுவனம் நகைக்கடன் வழங்கி வருகிறது. கடந்த சிலநாள்களுக்கு முன்பு, சிவகாசி இந்திரா நகரைச் சோ்ந்த அசோக்குமாா் மனைவி மாரியம்மாள், ராஜபாளையம் ஆண்டாள்புரம் ஞானபிரகாசம் மகன் சா்ச்சில் எட்வின் ஆகிய இருவரும் நிதி நிறுவனத்திற்கு வந்து 12 கிராம் எடையுள்ள வளையல்களை அடமானம் வைத்து ரூ.82 ஆயிரம் கடன் பெற்றுச் சென்றுள்ளனா்.

பின்னா் அந்த நகையை நிதிநிறுவன ஊழியா்கள் சோதனை செய்தபோது, அது காப்பரில் தங்கமுலாம் பூசியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நிதிநிறுவன மேலாளா் ஆறுமுகசாமி அளித்த புகாரின்பேரில் சிவகாசி நகா் போலீஸாா், மாரியம்மாள் மற்றும் சா்ச்சில் எட்வின் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →