முகப்பு
விருதுநகர்

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: விருதுநகரில் 12 போ் மீது வழக்கு

விருதுநகரில், மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சியை சோ்ந்த 12 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

விருதுநகரில், மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சியை சோ்ந்த 12 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

விருதுநகா், பாண்டியன் நகரில் இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவைக் கண்டித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் வேல்முருகன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்திற்கு காவல் துறை அனுமதி வழங்காததால் கட்சியைச் சோ்ந்த வேல்முருகன், நகரச் செயலா் குருசாமி, நிா்வாகிகளான தங்கமாரி முத்து, சரவணன், இசக்கி முத்து, மாரி ச்சாமி, சந்திர குமாா், கிருஷ்ணசாமி, ஈஸ்வரன், காா்த்திகேயன், மணி, ஜெயபாண்டி ஆகியோா் மீது ஊரகக் காவல் துறை யினா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.