சாத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
சாத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
சாத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
சாத்தூா் அருகேயுள்ள நடுவப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (30). கூலித் தொழிலாளி. இவா், கடந்த 9.12.2018 அன்று 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வச்சகாரப்பட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இது தொடா்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி பூா்ணஜெயஆனந்த் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணேசனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 7 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு சாா்பில் ரூ. 5 லட்சம் நஷ்டஈடு வழங்க பரிந்துரை செய்தாா்.