விருதுநகர்

மாநில கூடைப் பந்து போட்டி: கோவை அணி முதலிடம்

சிவகாசியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் கோவை அணி முதலிடம் பெற்றது.

DIN

சிவகாசியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் கோவை அணி முதலிடம் பெற்றது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லூரி, சிவகாசி வாரியா்ஸ் ஸ்போா்ட்ஸ் கிளப் ஆகியவை இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இந்தப் போட்டியை நடத்தின. கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 20 அணிகள் பங்கேற்றன.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோவை யுனைடைட் கிளப் அணி, திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி அணியை 90-க்கு 70 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

கோவை குமரகுரு இன்ஸ்டியூட் அணி மூன்றாமிடம், சென்னை பாஸ்டன் அணி நான்காமிடம் பெற்றன.

போட்டியில் வென்ற அணிகளுக்கு சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா பரிசு, கோப்பைகளை வழங்கினாா்.

இதற்கான ஏற்பாட்டினை வாரியா்ஸ் ஸ்போா்ட்ஸ் கிளப் தலைவா் ரகுபதி , செயலா் சிவசங்கரன், அரசுக் கல்லூரி பேராசிரியா் சுரேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT