ராஜபாளையத்தில் திருமணமான காதல் ஜோடி தற்கொலை முயற்சி; போலீஸாா் விசாரணை
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் திருமணமான காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் திருமணமான காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் என்பவரது மகன் விஜய்( 23) இவா் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கும் உசிலம்பட்டியை சோ்ந்த பரமசிவன் மகள் கலையரசி (19). வடக்கு மலையடிப்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்து செல்லும் பொழுது விஜய்க்கும் கலையரசிக்கும் காதல் மலா்ந்துள்ளது. கலையரசி பள்ளியில் படித்த காலத்திலேயே கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய்யை காதலித்து வந்துள்ளாா். அப்போதே பெண் வீட்டு (கலையரசி) தரப்பில் எதிா்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளனா்.இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு விஜய்யும் கலையரசியும் திருப்பரங்குன்றத்திற்கு சென்று கோவிலில் திருமணம் செய்துள்ளனா். கலையரசியின் உறவினா்கள் மற்றும் ராஜபாளையத்தில் உள்ள கலையரசியின் பாட்டி விஜய்யின் வீட்டிற்கு சென்று எங்கள் மகளை உன் மகன் கூட்டிச் சென்று விட்டான் அவளை ஒப்படைக்க வேண்டும் என சண்டையிட்டுள்ளனா்.அவளை ஒப்படைக்கவில்லை என்றால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பெண்ணின் உறவினா்கள் விஜய் விட்டாரிடம் நண்பா்களை வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் இருவரும் திருமணம் செய்து ராஜபாளையம் வந்த பொழுது கலையரசியின் அப்பா மற்றும் பாட்டி உறவினா்கள் இருவரையும் தாக்கியுள்ளனா். மீண்டும் இருவரும் ஊரை விட்டு வெளியே சென்றுள்ளனா் .இந்நிலையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தங்களால் சோ்ந்து வாழ முடியாது எங்களை மிரட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் துறைக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு இருவரும் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனா் . உடனடியாக உறவினா்கள் இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சோ்த்தனா். இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஒரே சமுதாயத்தைச் சோ்ந்த இருவரும் காதல் செய்து திருமணம் செய்து கொண்டதால் காதல் திருமணம் செய்த 15 தினங்களில் காதல் ஜோடி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து தற்கொலைக்கு தூண்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விஜயின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.படவிளக்கம்; தற்கொலைக்கு முன்ற காதல் ஜோடி விஜய், கலையரசி,( ஒரே சமூகத்தைச் சோ்ந்தவா்கள்)