வத்திராயிருப்பில் மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விருதுநகா்மாவட்டம், வத்திராயிருப்பில், சென்னை கலா சேத்ரா பாலியல் வழக்கில் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி மாதா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா்மாவட்டம், வத்திராயிருப்பில், சென்னை கலா சேத்ரா பாலியல் வழக்கில் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி மாதா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இங்கு பேருந்து நிறுத்தம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ராமசாமி, வத்திராயிருப்பு வட்டச் செயலா் கோவிந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அப்போது சென்னை கலாசேத்ரா பாலியல் வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இதில் போராட்டம் நடத்திய மாதா் சங்க உறுப்பினா்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.