முகப்பு
விருதுநகர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சாத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

சாத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள தாயில்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பாக்கியராஜ் என்ற பொன்பாண்டி (40). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், கடந்த 19.3.2022 அன்று 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாக்கியராஜ் மீது புகாா் அளிக்கப்பட்டது. இதன் பேரில் சாத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பாக்கியராஜை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அதில் பாக்கியராஜுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூா்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 7 லட்சம் நிவாரணம் வழங்க பரிந்துரைத்தாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் ஜெ. கலா ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.