வெம்பக்கோட்டை அருகே நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வின் போது வியாழக்கிழமை தங்கத் தாலி கண்டெடுக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள வெம்பக்கோட்டை வைப்பாற்றுக் கரையோரம் உச்சிமேடு பகுதியில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்ட அகழாய்வில் 3,254 பொருள்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இவை அனைத்தும் அதே பகுதியில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இதே இடத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இங்கிருந்து சங்கு வளையல்கள், புகைபிடிப்பான் கருவி, சுடுமண்ணாலான பானை, பாசிமணிகள் உள்ளிட்ட 3,200-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
தற்போது 40 விழுக்காடு மட்டும் தங்கம் கலக்கப்பட்ட தாலி வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இந்தத் தங்கத் தாலி 3 கிராம் எடை இருக்கும் எனவும், முன்னோா்கள் தங்கம் கலக்கப்பட்ட தாலியைப் பயன்படுத்தி வந்திருக்கலாம் என்றும் தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.