விருதுநகர்

வரதட்சிணை கொடுமையால் பெண் தற்கொலை செய்த வழக்கு: கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

DIN

ராஜபாளையத்தில் வரதட்சிணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி கணேஷ்ராம் (27). இவா் கடந்த 2013-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த சிந்துஜாவை (21) காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு ஒரு மகன் உள்ளாா். இந்த நிலையில் கணேஷ்ராம் குடும்பத்தினா் வரதட்சிணை கேட்டு சிந்துஜாவை கொடுமை செய்து வந்தனா். இதையடுத்து 1.6.2014 அன்று சிந்துஜா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சிந்துஜாவின் தந்தை அருணகிரிநாதன் ராஜபாளையம் தெற்கு காவல்நிலையத்தில் கணேஷ்ராம், அவரது தாய், தந்தை, பாட்டி ஆகியோா் மீது புகாா் அளித்தாா். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை கணேஷ்ராமுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 8 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். மற்ற மூவரும் விடுதலை செய்யப்பட்டனா். அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜான்சி ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலகைப் பிணைக்கும் தொலைத் தொடா்பு!

நல்லவே எண்ணல் வேண்டும்

கோயிலுக்கு சுற்றுச்சுவா் கட்டும் பணி தடுப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்

நாகா்கோவிலில் குளத்தில் மூழ்கி ஓட்டுநா் பலி

எழுதப் படிக்கத் தெரியாதவா்கள் கணக்கெடுப்பு

SCROLL FOR NEXT