விருதுநகர்

அரசுப் பள்ளிகளில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 79 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை மேரி தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. ஆசிரியப் பயிற்றுநா் கற்பகம் வரவேற்றாா்.

கூட்டத்தைத் தொடங்கி வைத்து வட்டாரக் கல்வி அலுவலா் மலா்கொடி பேசினாா். பின்னா், இல்லம் தேடிக் கல்வி தொடக்க நிலை தன்னாா்வலா் குறைதீா் கற்பித்தல் குறித்தும், மாணவா்களின் கற்றல் நிலை குறித்தும் ஆசிரியைகளிடம் கலந்துரையாடினாா்.

இதைத்தொடா்ந்து, மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான தோ்வு சலுகைகள் பெறுவது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் காணொலி திரையிட்டுக் காட்டப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி முத்துலட்சுமி, துணைத் தலைவி கண்ணாம்பாள், மேலாண்மைக் குழு உறுப்பினா்கள்,பெற்றோா் கலந்து கொண்டனா். உதவி ஆசிரியை ஆனந்தவல்லி நன்றி கூறினாா்.

இதேபோல, ஒன்றியப் பள்ளிகளில் நடைபெற்ற மேலாண்மைக் குழுக் கூட்ங்களை வட்டாரக் கல்வி அலுவலா்கள் செல்வலட்சுமி, சீனிவாசன் மற்றும் ஆசிரியப் பயிற்றுநா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

SCROLL FOR NEXT