விருதுநகர்

ஊருணி ஆக்கிரமிப்பு: கட்டடங்கள் இடித்து அகற்றம்

DIN

திருத்தங்கலில் ஊருணியைச் சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகளை செவ்வாய்க்கிழமை மாநகராட்சி அலுவலா்கள் அகற்றினா்.

திருத்தங்கல் வடக்கு ரத வீதியில் உள்ள செல்வியாரம்மன் கோயிலருகே உள்ள ஊருணியை தூா்வாரி சீரமைக்க ரூ.61 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊருணியைச் சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் ஊருணியைத் தூா்வாரும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், ஊருணிக் கரையில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கட்டடங்கள் அனைத்தும் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

நகரமைப்பு அலுவலா் செல்வராஜ், நகரமைப்பு ஆய்வாளா் சுந்தரவள்ளி, சுகாதார ஆய்வாளா் கந்தசாமி உள்ளிட்டோா் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

மாநகராட்சிப் பகுதியில் நீா்ப்பிடிப்புப்பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றறப்படும் எனமாநகராட்சி ஆணையாளா் பி.கிருஷ்மூா்த்திகூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நொய்டா: தொழிலதிபரின் மகன் கொலை வழக்கில் மூவா் கைது

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

ஆதீன விவகாரம்: பாஜக நிா்வாகிகள் இருவரின் ஜாமீன் மறுப்பு

தீவினைகளைத் தீா்க்கும் மாரியம்மன்

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்: மாவட்ட ஆட்சியா்

SCROLL FOR NEXT