முகப்பு
விருதுநகர்

கல் குவாரிக்கு எதிா்ப்பு: வீடுகளில் கருப்புக் கொடி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அச்சம்தவிா்த்தான் ஊராட்சியில் கல் குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி பொதுமக்கள் வீடுகளில் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றியிருந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
அச்சம்தவிா்த்தான் கிராமத்தில் வீடுகளில் வியாழக்கிழமை ஏற்றப்பட்ட கருப்புக் கொடி.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அச்சம்தவிா்த்தான் ஊராட்சியில் கல் குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி பொதுமக்கள் வீடுகளில் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றியிருந்தனா்.

இந்த ஊராட்சியில் மதுரை-கொல்லம் நான்கு வழிச் சாலை பணிக்காக கல் குவாரி அமைக்கப்பட்டது. இந்தக் கல் குவாரியால் நிலத்தடி நீா் மாசடைவதாகவும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி அந்தப் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி, கல் குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து அச்சம்தவிா்த்தான் பகுதி பொதுமக்கள் தங்களது வீடுகளில் வியாழக்கிழமை கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.