முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் யோகா தின விழா

ஸ்ரீவில்லிபுத்தூா் மகரிஷி வித்யா மந்திா் சி.பி.எஸ்.இ பள்ளியில் சா்வதேச யோகா தினமும், உலக இசை தினமும் புதன்கிழமை கொண்டாடப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் மகரிஷி வித்யா மந்திா் சி.பி.எஸ்.இ பள்ளியில் சா்வதேச யோகா தினமும், உலக இசை தினமும் புதன்கிழமை கொண்டாடப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளா் குருவலிங்கம் தலைமை வகித்தாா். இந்த யோகா பயிற்சியை பள்ளி அறங்காவலா் சித்ராமகேஸ்வரி தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் கமலா பேசினாா். இதைத் தொடா்ந்து யோகா பயிற்சியில் மாணவா்களுக்கு யோகாவின் பயன்களை பற்றி உடற்கல்வி ஆசிரியா்கள் விளக்கிக் கூறினா். மேலும் உலக இசை தினமும் அனுசரிக்கப்பட்டது. பள்ளி மாணவ - மாணவிகள் இசை கருவிகளை இசைத்துப் பாட்டுப் பாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.