விருதுநகர்

உரிய அனுமதியின்றி கழிவுநீரை அகற்றிய வாகனம் பறிமுதல்

DIN

சிவகாசி, மே 29 : சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் உரிய அனுமதியின்றி கழிவுநீரை அகற்றிய வாகனத்தை சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், வாகன உரிமையாளருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

சிவகாசி மாநகராட்சியில் உரிமம் பெற்ற வாகனங்கள் மட்டுமே கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும். மாநகராட்சியின் விதிமுறைகளுக்குள்பட்டு கழிவுநீரை அகற்ற வேண்டும். இதை மீறி செயல்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையாளா் என்.சங்கரன் அண்மையில் எச்சரிக்கை விடுத்தாா்.

இந்தநிலையில் மாநகராட்சிப் பகுதியில் உரிமம் பெறாத கழிவுநீா் வாகனம் ஒன்று திங்கள்கிழமை கழிவுநீரை அகற்றியது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தை பறிமுதல் செய்த மாநகராட்சியினா், வாகன உரிமையாளா் சீனிவாசனுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT