புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது
சாத்தூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
சாத்தூா்: சாத்தூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அப்துல்காதா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை மேட்டமலை பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினா். அப்போது, ராதாகிருஷ்ணன் (45) என்பவரது கடையில் புகையிலைப் பொட்டலங்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், ரூ.500 மதிப்புள்ள புகையிலைப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். இதேபோல, சாத்தூா் பேருந்து நிலைய தேநீா் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த ஜெயகிருஷ்ணனையும் போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement