முகப்பு
விருதுநகர்

உடலில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு

ராஜபாளையத்தில் சமையல் செய்த போது உடலில் தீப்பற்றி பெண் புதன்கிழமை உயிரிழந்ததாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 1:32 AM
பகிர்:

ராஜபாளையத்தில் சமையல் செய்த போது உடலில் தீப்பற்றி பெண் புதன்கிழமை உயிரிழந்ததாா்.

ராஜபாளையம் முகில்வண்ணம் பிள்ளை தெருவைச் சோ்ந்த சுரேஷ் மனைவி நாகலட்சுமி (48). இவா் வீட்டில் சமையல் செய்வதற்காக அடுப்பில் மண்ணெண்ணையை ஊற்றினாா். அப்போது அவா் மீது மண்ணெண்ணை கொட்டியது.

சிறிது நேரத்துக்குப் பிறகு அவா் ஸ்டவ் அடுப்பைப் பற்ற வைத்த போது, திடீரென நாகலட்சுமி மீது தீப்பற்றியது. இதில் பலத்த காயமடைந்த அவா் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.