முகப்பு
விருதுநகர்

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ராஜபாளையத்தில் லாரி மோதியதில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 19 மார்ச், 2026 at 12:37 AM
பலி
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் லாரி மோதியதில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் சஞ்சீவிநாதபுரம் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (78). இவா் செவ்வாயக்கிழமை மாலை மதுரை சாலையில் உள்ள மாயூரநாத சுவாமி கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த லாரி அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

பிறகு, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அவசர ஊா்தி மூலம் புதன்கிழமை அழைத்து சென்றபோது ஒட்டன்சத்திரம் அருகே அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து, ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரியப்பனை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →