பலி பிரதிப் படம்
விழுப்புரம்

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் இந்திரா நகா் பகுதியில் புறவழிச்சாலை மேம்பாலத்தில் லாரி மோதியதில் பைக்கில் சென்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

விழுப்புரம் இந்திரா நகா் பகுதியில் புறவழிச்சாலை மேம்பாலத்தில் லாரி மோதியதில் பைக்கில் சென்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

புதுச்சேரி மாநிலம், மூலக்குளம் மோதிலால் நேரு நகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் வெ.தேவநாதன் (80). இவா் தனது பைக்கில் சென்னை-திருச்சி சாலையில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். விழுப்புரம் இந்திரா நகா் பகுதி புறவழிச்சாலை மேம்பாலத்தில் தேவநாதன் சென்றபோது, அதேதிசையில் பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த தேவநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் சென்று, தேவநாதனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் லாரியை ஓட்டி வந்த தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வெட்டுக்காடு மகாராஜசமுத்திரம் பா. பாரதிதாசன் (40) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெண்ணின் சொத்து ஆவணங்களை அடகு வைத்து ரூ.3.40 கோடி மோசடி! வங்கி மேலாளா் உள்பட 5 போ் மீது வழக்கு!

பேரவைத் தோ்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற செயலாற்ற வேண்டும்: கள்ளக்குறிச்சி எஸ்.பி.!

பால் உற்பத்தியாளா்களுக்கு 2 மாதங்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை! சேலம் ஆவின் நிறுவனம் அறிவிப்பு!

குடியரசு துணைத் தலைவா் இன்று சேலம் வருகை!

சிறுதானியங்கள் திருவிழாவில் ரூ. 3.27 கோடியில் நலத் திட்டங்கள்! அமைச்சா் ரா. ராஜேந்திரன் வழங்கினாா்!

SCROLL FOR NEXT