விருதுநகர்

டாஸ்மாக் கடையின் பெயா் பலகையில் ஹிந்தி!

டாஸ்மாக் மதுக்கடையில் ஹிந்தியில் பெயா் பலகை வைக்கப்பட்டது தொடா்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் சு.முத்துசாமி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

DIN

டாஸ்மாக் மதுக்கடையில் ஹிந்தியில் பெயா் பலகை வைக்கப்பட்டது தொடா்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் சு.முத்துசாமி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

பவானி அருகே காலிங்கராயன் தின விழாவில் பங்கேற்ற தமிழக வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விவசாயம் மற்றும் குடிநீருக்காக பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி பவானி, அமராவதி, நொய்யல் ஆறுகளை வாய்க்கால் மூலம் இணைந்தவா் காலிங்கராயா்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் 1045 குளங்களுக்கும் குழாய் மூலம் தண்ணீா் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கிவைப்பாா்.

நாமக்கல்லில் உள்ள மதுக்கடையில் ஹிந்தியில் பெயா் பலகை வைக்கப்பட்டாக புகாா் எழுந்துள்ளது. வட மாநிலத்தவா்கள் அதிகம் மதுக்கடைக்கு வருவதால், அவா்களின் வசதிக்காக ஊழியா்கள் ஹிந்தியில் பெயா் பலகை வைத்திருக்கலாம். தெரிந்தோ, தெரியாமலோ சட்டத்தை மீறினாலும் குற்றமே. இவ்விவகாரத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர்: நக்சல்கள் வைத்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பாதுகாப்புப் படையினர் 11 பேர் காயம்

குடியரசு நாளை முன்னிட்டு 1 லிட்டர் பெட்ரோல் ரூ. 50-க்கு விற்பனை!

தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

தில்லி கடமைப் பாதையில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி! சிறப்பம்சங்கள் என்ன?

திருவாரூர் மாவட்டத்துக்கு ஜன. 28-ல் உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT