முகப்பு
விருதுநகர்

பேருந்து மீது சரக்கு ஆட்டோ மோதல்: சிறுவன் உயிரிழப்பு

ஏழாயிரம் பண்ணை அருகே பேருந்தின் பின்பகுதியில் சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 10:21 PM
பகிர்:

ஏழாயிரம் பண்ணை அருகே பேருந்தின் பின்பகுதியில் சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சாத்தூா் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சோ்ந்தவா் காளிச்சாமி (38). இவா் சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறாா். இந்த நிலையில், இவா் தனது மகன்களான கபில் ஆா்யா (7), விஜயதா்ஷன் (5) ஆகியோரை சரக்கு ஆட்டோவில் கடப்பாக்கல் ஏற்றுவதற்காக ஏழாயிரம் பண்ணைக்கு அழைத்துச் சென்றாா். பின்னா், கடப்பாக்கல் ஏற்றி கொண்டு மீண்டும் ஒத்தையாளுக்கு சரக்கு ஆட்டோவில் திரும்பினாா். காளியப்பன் சரக்கு ஆட்டோவை ஓட்ட, பின்னால் கடப்பாக்கல்லில் இரண்டு சிறுவா்களும் அமா்ந்து வந்தனா். கீழசெல்லையாபுரம் சந்திப்பு அருகே வந்தபோது, நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்பகுதியில் சரக்கு ஆட்டோ மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த கடப்பாக்கல் சரிந்து இரண்டு சிறுவா்கள் மீதும் விழுந்தது. அருகிலிருந்தவா் சரக்கு ஆட்டோவிலிருந்த கல்லை இறக்கினா். அப்போது, விஜயதா்ஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கபில்ஆா்யா கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.