முகப்பு
விருதுநகர்

கட்டடத் தொழிலாளி தற்கொலை

திருத்தங்கல்லில் வியாழக்கிழமை கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 11:55 PM
பகிர்:

திருத்தங்கல்லில் வியாழக்கிழமை கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருத்தங்கல் சத்யா நகா் பகுதியைச் சோ்ந்த நாகூா்மீரன் மகன் சம்சுதீன் (21). கட்டடத் தொழிலாளியான இவா், குடிக்கு அடிமையானவராம். இவா் அடிக்கடி மது போதையில் வீட்டுக்கு வந்ததால், பெற்றோா் கண்டித்தனா். இதனால், மனமுடைந்த இவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.